இரவு 10.00 மணி DD தமிழ் செய்திகள் [07.08.2024]

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • 1) கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக கூறி பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் - சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா
    2) வினேஷ் போகாட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோதி - தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது என தலைவர்கள் கருத்து
    3) வினேஷ் போகாட் தகுதி நீக்கத்தில் எவ்வித மாற்றமும் இல்லை - அனைவருக்கும் ஒரே விதிதான் என சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவிப்பு
    4) 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா - மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
    5) மத்திய அரசின் 2024 ஆம் ‍ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகள் - சந்திராயன் - 3 திட்ட விஞ்ஞானிகள் உட்பட 33 பேர் தேர்வு
    6) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் - நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை
    7) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் கைலாஷ்நாதன் - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
    8) வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் யாருக்கும் எதிரானது அல்ல - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை
    9) வன்முறை அரங்கேறும் பங்களாதேஷில் இந்திய தூதரகம் பாதுகாப்புடன் செயல்பட நடவடிக்கை - இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நாளை தாயகம் திரும்புகிறார்
    10) இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் - 110 ரன் வித்தியாசத்தில் ‍வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை

Komentáře • 3