மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2021
  • மதுரையின் தெருக்கள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் இதற்கு முன்பாக பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்த முறை மதுரை வளையல்காரத் தெரு குறித்தும், அதற்கு ஏன் இந்த பெயர் வந்தது, இங்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
    கிட்டதட்ட 270க்கும் மேற்பட்ட கடைகள் இ்ங்குள்ளன. முதலில் இப்பகுதியில் முஸ்லிம்கள் மட்டுமே வசித்துவந்துள்ளனர். அதற்குச் சான்றாக அங்கு இன்றும் பழமையான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அதன் பின்னர் வளையல் கடைகள் வந்துள்ளன. பின்னாளில் அங்கிருந்த வீடுகள் ஒவ்வொன்றாக மறைந்து கடைகளாக உருமாறியதாக கூறுகின்றனர்.
    பல தலைமுறைகளாகவும் இங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் இன்றும் உள்ளனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புதான் வடமாநிலத்தவர்கள் இங்கு கடை விரித்துள்ளனர். அவர்களுடன் மதுரை வியாபாரிகளும் நல்லுறவு வைத்து இருவரும் ஒற்றுமையுடன் தொழில் செய்து வருவது பெருமைக்கூறிய விசயமாகும்.
    இங்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை கூட கடைகள் இயங்குவதாக கூறுகின்றனர். முக்கிய நள்ளிரவில் கடைகள் திறந்திருப்பது திருவிழாக் காலங்களில்தான். கடந்தாண்டு சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டு லாக்டவுன் ஆன காரணத்தில் அதன் தாக்கும் இப்பொழுதும் நீடிக்கிறது என்கின்றனர் இங்குள்ள வியாபாரிகள்.
    50 சதம் மட்டுமே தங்களது வியாபாரம் நடப்பதாக கூறும் இவர்கள் இந்தாண்டு 2021 சித்திரைத் திருவிழா முதல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இங்கு கண்களைக் கவரும் எண்ணற்ற வளையல்கள் வடக்கிருந்து வருகின்றன. பார்க்கும்போது ஒவ்வொன்றும் அழகழகாய் மின்னுவதை காண முடிந்தது.
    கர்பமான பெண்களுக்கு வளைகாப்பிற்கு இங்கு வளையல்கள் வாங்குவது தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி இங்கு பெண்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ளவர்களிடம் சில்லரையாக வாங்கி அதில் அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களும் ஏராளம்.
    முக்கியமாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சீனாவிலிருந்து வரும் வளையல்கள் மற்றும் அழகு பொருட்களுக்கு தடை விதித்திருப்பதன் காரணமாக இந்திய தயாரிப்பு பொருட்கள் விற்பனை பிரமாதமாக உள்ளது என்றபோதும், இங்கு தயாரிக்கும் வளையல் போன்ற பொருட்களுக்கு விலை சற்றே அதிகம் என்கின்றனர்.
    மதுரையின் ஒவ்வொரு வீதிகளுக்கும் ஒவ்வொரு வரலாறு ஒலிந்திருக்கும். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த வளையல் வீதியையும் ஒரு வலம் வந்தால் அங்குள்ள கண்ணாடி வளையல்கள் நிச்சயமாக இளம் கண்ணியர்களின் கைகளில் சேர அழைப்புவிடுக்கும்.
    சித்திரைத் திருவிழாவிற்காக காத்திருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம் போன்ற பொருட்கள் இந்த முறை வியாபாரத்தின் வாயிலாக தங்களது வறுமையின் பாரத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருந்தது.
    இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றோம். எங்கள் வீடியோக்கள் குறித்து நீங்கள் உங்களது கருத்துகளையும். எதுவெல்லாம் எடுக்க வேண்டும் என்பனவற்றையும் எங்களுக்கு நீங்கள் கூறலாம்.
    நன்றிகள் ~~~
    _________________________________________________________
    மதுரை தெருக்கள் குறித்த முந்தைய பதிவுகள்
    👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇
    மேலக் கோபுரத் தெரு - 01
    • - மேலக் கோபுரத் தெரு -...
    வடக்கு கோபுரத் தெரு - 02
    • வடக்கு கோபுரத் தெரு - ...
    இராய கோபுரத் தெரு - 03
    • இராய கோபுரத் தெரு - 03...
    தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு -04
    • தெற்கு கிருஷ்ணன் கோவில...
    வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு - 05
    • வடக்கு கிருஷ்ணன் கோவில...
    _________________________________________________________
    இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.com/store/apps/de...
    💓 Facebook : / maduraivideo
    💓web site :www.hellomaduraitv.com
    💓web site :www.hellomadurai.in
    💓web site :www.tamilvivasayam.com
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Komentáře • 11

  • @elumalai6178
    @elumalai6178 Před 6 měsíci +1

    சூப்பர்

  • @Hellomaduraitv
    @Hellomaduraitv Před 3 lety +1

    Use full video

  • @nainarrajan9407
    @nainarrajan9407 Před 3 lety

    Super vaalthukkal. 💐💐💐

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 3 lety +2

    வருடத்திற்க்கு ஒரு முறை ஆவணி மூலம் திருவிழா அன்று ஸ்ரீ.சொக்கனத்தர் பெருமான் வளையால் விற்ற லீலை வைப்பவம் நடக்கும்.அன்று யானை மேல் அம்பாரியாக வந்து வளையால் விற்க்கும் லிலை நடைபெரும்.ஆதாலால் இந்த இடத்திற்க்கு பெரிய வளையல்கார தெரு.அதே போல் சின்ன வளையல்கார தெரு உள்ளது.

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 Před měsícem

    How to come

  • @kavithat.kavitha8014
    @kavithat.kavitha8014 Před rokem +1

    Tell Me The Exact Location And Address Sollunga Please

  • @TNKavi-nt3yf
    @TNKavi-nt3yf Před rokem +1

    Location. Sollunga

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem +1

    விலை போடுங்க

  • @user-jr3si6so1r
    @user-jr3si6so1r Před 5 měsíci

    மினிமம் எவ்வளவு வாங்க வேண்டும் (வியாபாரத்திற்கு)

  • @sabapathy.9842
    @sabapathy.9842 Před rokem

    Bangles kadai phone number