Bashyam Narayanan
Bashyam Narayanan
  • 7 266
  • 360 547
மீண்டும் பெரிய திருமொழி 8.6 திருக்கண்ணபுரம்
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்,
கண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,
மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
விளக்க உரை
(1707)
கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்
இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
zhlédnutí: 8

Video

மீண்டும் பெரிய திருமொழி 8.5 திருக்கண்ணபுரம்
zhlédnutí 30Před 2 hodinami
தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின்,தமியேன்றன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை, அந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும், மந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே. மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில், தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன், ஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும், தேரும் போயிற்றுத் திசைகளும் ...
மீண்டும் பெரிய திருமொழி 8.4 திருக்கண்ணபுரம்
zhlédnutí 22Před 4 hodinami
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன், மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர், கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல், வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. வேத முதல்வன் விளங்கு புரிநூலன், பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி, காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான், தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி, அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும், கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்ப...
மீண்டும் பெரிய திருமொழி 8.3 திருக்கண்ணபுரம்
zhlédnutí 15Před 4 hodinami
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும், திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும், விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும் தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும், வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண், கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. துங்கமா மணிமாட நெடுமுகட்டின்...
மீண்டும் பெரிய திருமொழி 8.2 திருக்கண்ணபுரம்
zhlédnutí 14Před 7 hodinami
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ண புரமென்று காட்டினாள், பாணனார் திண்ண மிருக்க இனியிவள் நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினா...
மீண்டும் பெரிய திருமோழி 8.1 திருக்கண்ணபுரம்
zhlédnutí 19Před 7 hodinami
மீண்டும் பெரிய திருமோழி 8.1 திருக்கண்ணபுரம்
மீண்டும் பெரிய திருமொழி 8.1 திருக்கண்ணபுரம்
zhlédnutí 17Před 9 hodinami
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால், மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால், முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால், கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால், பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால், ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் ...
மீண்டும் பெரிய திருமொழி 7.10 திருக்கண்ணமங்கை
zhlédnutí 24Před 19 hodinami
பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை,எண்ணில் முனிவர்க் கருள் தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை, அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக் கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை, மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை, நென்...
மீண்டும் பெரிய திருமொழி 7.9 சிறுபுலியூர் சலசயனம்
zhlédnutí 25Před 21 hodinou
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர் வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும் தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத் துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே. தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி, பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர், திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து, உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே. பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண...
மீண்டும் பெரிய திருமொழி 7.7 திருவழுந்தூர்
zhlédnutí 8Před dnem
திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா, உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா, ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூமகள் தன்னொடு முடனே வந்தாய்,என்மனத் தேமன்னி நின்றாய் மால்வண்ணா மழை போலொளி வண்ணா, சந்தோகா பௌழியா தைத்த...
மீண்டும் பெரிய திருமொழி 7.6 திருவழுந்தூர்
zhlédnutí 21Před dnem
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த, சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை, செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற, அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும், மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு, ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற, தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை, விடையா னோடவன்று விறலாழி விசைத்...
மீண்டும் பெரிய திருமொழி 7.5 திருவழுந்தூர்
zhlédnutí 11Před 14 dny
ந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும், முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர் அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை யாள, பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும், நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள், ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே! செம்பொன் மதிள்சூழ் த...
மீண்டும் பெரிய திருமொழி 7.4 திருச்சேறை
zhlédnutí 33Před 14 dny
கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை, மண்சேர முலையுண்ட மாமதலாய் வானவர்தம் கோவே. என்று, விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமேலாரே. அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல் கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம், வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய, எம்பெருமான் தாள்தொழ...
மீண்டும் பெரிய திருமொழி 7.3 திருநறையூர்
zhlédnutí 28Před 14 dny
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் மாமுனி யைமர மேழெய்த மைந்தனை, நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை, கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே. தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக் காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ...
மீண்டும் பெரிய திருமொழி 7.2 திருநறையூர்
zhlédnutí 15Před 14 dny
மீண்டும் பெரிய திருமொழி 7.2 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 7.1 திருநறையூர்
zhlédnutí 15Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 7.1 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.10 திருநறையூர்
zhlédnutí 10Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 6.10 திருநறையூர்
மீண்டும் பெரிய திருறொழி 6.9 திருநறையூர்
zhlédnutí 10Před 21 dnem
மீண்டும் பெரிய திருறொழி 6.9 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.8 திருநறையூர்
zhlédnutí 29Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 6.8 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.7 திருநறையூர்
zhlédnutí 19Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 6.7 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.6 திருநறையூர்
zhlédnutí 19Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 6.6 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.5 திருநறையூர்
zhlédnutí 21Před 21 dnem
மீண்டும் பெரிய திருமொழி 6.5 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.4 திருநறையூர்
zhlédnutí 20Před 28 dny
மீண்டும் பெரிய திருமொழி 6.4 திருநறையூர்
மீண்டும் பெரிய திருமொழி 6.3 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
zhlédnutí 39Před 28 dny
மீண்டும் பெரிய திருமொழி 6.3 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
மீண்டும் பெரிய திருமொழி 6.2 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
zhlédnutí 32Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 6.2 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
மீண்டும் பெரிய திருமொழி 6.1 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
zhlédnutí 38Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 6.1 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்
மீண்டும் பெரிய திருமொழி 5.10 நந்திபுர விண்ணகரம்
zhlédnutí 38Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 5.10 நந்திபுர விண்ணகரம்
மீண்டும் பெரிய திருமொழி 5.9 தென்திருப்பேர் அப்பக்குடத்தான்
zhlédnutí 37Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 5.9 தென்திருப்பேர் அப்பக்குடத்தான்
மீண்டும் பெரிய திருமொழி 5.8 திருவரங்கம்
zhlédnutí 28Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 5.8 திருவரங்கம்
மீண்டும் பெரிய திருமொழி 5.7 திருவரங்கம்
zhlédnutí 29Před měsícem
மீண்டும் பெரிய திருமொழி 5.7 திருவரங்கம்

Komentáře