Balaji
Balaji
  • 4
  • 3 812
ஸ்ரீ தாளபுரீஸ்வரர் சிவ ஆலயம், திருப்பனங்காடு,Thiruppanangadu Shiva Temple Kanchipuram திருப்பனங்காடு
ஸ்ரீ தாளபுரீஸ்வரர் சிவ ஆலயம், திருப்பனங்காடு,Thiruppanangadu Shiva Temple Kanchipuram திருப்பனங்காடு
Ajith contact +918678981111 +919940443168
Sri Thalapureeswarar Temple, Thirupanangadu, Thiruvannmalai District
Temple Location : 85KM from Chennai, 16 Km from Kanchipuram
Temple Timings: 7.30 a.m. to 11:30 p.m. and 6.00 p.m. to 8:00 p.m.
திருக்கோவிலின் பெயர் : ஸ்ரீ தாளபுரீஸ்வரர் சிவ ஆலயம், திருப்பனங்காடு திருவண்ணாமலை மாவட்டம்
திருக்கோவில் அமைவிடம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திருந்து இருந்து 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் தரிசன நேரம் : காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை
இறைவர் திருப்பெயர் : பனங்காட்டு ஈஸ்வரர், தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அமிர்தவல்லி, கிருபாநாயகி
தல மரம் : பனை
தீர்த்தம் : ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம்
வழிபட்டோர் :சுந்தரர், அகத்தியர்,புலத்தியர்
தேவாரப் பாடல்கள் :சுந்தரர்- விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை...
தல வரலாறு:
திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது )
இரண்டு மூலவர்கள் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்
இரண்டு அம்பாள் சந்நிதி,
இரண்டு கொடிமரம்,
இரண்டு நந்தி
இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது.
அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.
அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் அவரை மறைத்து பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர், உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா? என்றார். அம்முதியவர் "உங்களுக்கு நீர் கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது.
வியந்த சுந்தரர் முதியவரிடம், தாங்கள் யார்? என்றார். அதற்கு முதியவர், "உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி "வம்பு செய்பவன், கள்ளன்' என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தத்தை "சுந்தரர் தீர்த்தம்' என்கின்றனர்.
சிறப்புக்கள் :
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது.
வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த யோகனந்த முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சிவன் கோயிலுக்குள் செல்லும் முன்பு முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள்.
Thiruvannamalai
Kanchipuram
ஸ்ரீ தாளபுரீஸ்வரர் சிவ ஆலயம்
திருப்பனங்காடு
Thiruppanangadu Shiva Temple
Sri Thalapureeswarar Temple
திருத்தல யாத்திரை
இந்து கோவில்கள்
சிவ ஆலயங்கள்
திருக்கோயில்கள்
கோயில்
திருக்கோவில்கள்
Travel
Tour
Entertainment
Thirukovilkal
Thirukovilgal
Temples of Tamilnadu
Padal Petra Sthalangal
Padal Petra Temples
Devara Sthalangal
Shiva Temples
Temple Travel Guide
Temple Yatra
Sthala Yatra
Hindu Temples
Nayanmarkal
zhlédnutí: 1 421

Video

சிவன் கோவில்கள் Pachamalai Hill Temple Near Chromepet பச்சைமலை காளி கோவில் ஓம் காளி ஜெய் காளி
zhlédnutí 1KPřed rokem
ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம். சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து...

Komentáře

  • @chitras7181
    @chitras7181 Před 3 měsíci

    ஓம் நமசிவாய நம

  • @_mugu_crush_143
    @_mugu_crush_143 Před rokem

    😃

  • @prabusampath5259
    @prabusampath5259 Před rokem

    எங்க ஊரு தான் 👌👌👌👍👍👍

  • @Agatheeswaran
    @Agatheeswaran Před rokem

    உலக நிகழ்வை முன்கூட்டியே சொல்லும் என தலைப்பை கீழே விட்டிருக்கீங்களே சகோ அதை பற்றி சொல்லவே இல்லையேங்க